முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
அடுத்து முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவம்
இந்த படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உங்கள் பகுதி விஏஓ விடம் கையெழுத்து பெற்று உங்கள் பகுதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து அங்கு புகைபடம் எடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் . இரண்டு தினங்களுக்குள் உங்கள் மருத்துவ காப்பிடு திட்ட கார்டு ரெடி
என்னென்ன சான்றுகள் தேவை?
குடும்ப அட்டை
வருமானச் சான்று
ஆதார் அட்டை
கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்து, குடும்ப தலைவரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: கட்டணமில்லாத் தொலைபேசி எண்-
1800 425 3993
( 24 மணி நேரமும் செயல்படும்)
விண்ணப்ப படிவம்:-
Tags: முக்கிய செய்தி