அமேசான் Spin And win சலுகை உண்மையா?
அட்மின் மீடியா
0
அமேசான் ஸ்பின் மற்றும் வின் சலுகை என சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
உண்மை என்ன?
ஸ்பின் அண்ட் வின் என்பது சூதாட்டத்தில் ஒரு சக்கரத்தை சுற்றிவிட்டால் அது எந்த எண்ணில் நிற்கின்றதோ அதற்கு பணம் கிடைக்கும் அதுபோல் இதில் எண்களுக்கு பதிலாக மொபைல் போனின் படம் உள்ளது.
இதை சுற்றிவிட்டால் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்
நீங்கள் வெற்றி பெற்ற உங்கள் போன் உங்களுக்கு கிடைக்க இந்த தகவலை 20 வாட்ஸப் குருப்புக்கு அனுப்புங்க என்று ஒரு மெசஜ் வரும்
நீங்களும் போன் கிடைக்கும் என்று பல குருப்புக்கும் ஷேர் செய்வீர்கள். பிறகு வந்து பார்த்தால் திரும்பவும் ஷேர் என்று வரும்
கடைசி வரை உங்களுக்கு ஏமாற்றம் தான்
முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்
அது அமேசான் இனையதளம் இல்லை
அந்த பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொய்யான தளம்
எந்த ஒரு பிரபல நிறுவனமும் இது போல் செய்யாது
சமீபத்தில் ரான்சம்வேர் வைரஸ் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே, சந்தேகத்திற்குறியவற்றை கிளிக் செய்யாமல் டெலிட் செய்வது நல்லது தேவையில்லாத 'லிங்க்'குகளை ஓபன் செய்வது, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
என அட்மீன் மிடியா தங்களை அறிவுறுத்துகின்றது.
Tags: மறுப்பு செய்தி