ஹோண்டா ஸ்கூட்டர் இலவசம் என்ற செய்தி உண்மையா
அட்மின் மீடியா
0
*Honda is giving away 320 Free Honda Activa 5G Scooters to celebrate New Year*. Get your free scooter at : http://newyear.specialoffer.xyz
என்ற ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
இந்த இணையதள முகவரியை நீங்கள் உங்கள் கம்பியூட்டரில் கிளிக் செய்தால் இது போன்று வருகின்றது
ogool.com/confirmmx.html என்ற URL க்கு திருப்பி விடுகிறது,
இது நீங்கள் 16 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்கிறது.
உறுதிப்படுத்துகிறேன்’ பொத்தானை நாம் கிளிக் செய்யும் ஒவ்வொரு முறையும் வேறு URL க்கு அழைத்துச் செல்லுகின்றது
yedd.xyz/chrome/new/13/?v=500#sdapp93
இதுவே நீங்கள் உங்கள் மொபைல் போனில் இருந்து கிளிக் செய்தால் அது
* ஹோண்டா 300 இலவச ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்கூட்டர்களை வழங்கி வருகிறது *. உங்கள் இலவச ஸ்கூட்டரை இங்கு பெறுங்கள்:
மேலும் கிளிக் செய்தால் கடைசியில் இப்படி முடியும்
நீங்கள் குறைந்தபட்சம் 20 வாட்ஸ்அப் நண்பர்கள் அல்லது குழுக்களுக்கு இணைப்பை அனுப்பினால் மட்டுமே ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று வரும்
நீங்களும் ஆசையில் 20 நபர்களுக்கு அனுப்பிவிட்டு வந்து பார்த்தாலும் மீண்டும் அதே போல் சொல்லும்
ஆன்லைனில் மக்களை ஏமாற்றுவதற்கான போலி வலைத்தளங்களின் வழக்கமான ஒரு மோசமான வலைத்தளம் நிறுவனத்தின் உண்மையான போர்ட்டலாக தோற்றமளிக்கிறது.
ஆகவே இது போலியான வளைதளம் ஆகும்
ஹோண்டாவின் அசல் வலைத்தளம்
https://www.honda2wheelersindia.com/ ஆகும், மேலும் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அத்தகைய விளம்பரங்களை எதுவும் காணவில்லை.
எனவே, ஹோண்டா புத்தாண்டில் 320 இலவச ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்கூட்டர்களை வழங்குகிறது என்ற செய்தியை பொய்யாக பரப்புகின்றனர்.
அட்மின் மீடியா ஆதாரம்
https://newsmeter.in/fact-check-is-honda-giving-away-320-activa-5g-scooters-for-new-year/
Tags: மறுப்பு செய்தி