Breaking News

மஹாராஷ்டிராவின் இளம் இஸ்லாமிய பெண் IPS அதிகாரி ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி என்னவென்றால் மும்பையில் 24 வயதே ஆன ஓர் இஸ்லாமிய பெண் IPS ஆக தேர்வு செய்யபட்டுள்ளார் எம ஒரு புகைபடத்தை  ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவில் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

சர்வதேச மகளிர் தினத்திற்கு  மார்ச் 8 ம் தேதி ஆகும் அதனை முன்னிட்டு பெண்களை நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு தனித்துவமான முயற்சியில், மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒரு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டார். 

மல்காபூர் தாலுகாவில் உள்ள ஜில்லா பரிஷத் உருது உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சஹ்ரிஷ் கன்வால், என்ற ஓர் இஸ்லாமிய சிறுமி ஒரு நாள் டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றார். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர அந்த சிறுமி  தீர்மானித்தார், 


அந்த செய்தியினை எடுத்து தவறாக பொய்யாக பரப்பிவருகின்றார்கள்


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


 அட்மின் மீடியா ஆதாரம்


https://timesofindia.indiatimes.com/city/nagpur/international-womens-day-girls-to-act-as-collector-sp-for-a-day/articleshow/74491950.cms



அட்மின் மீடியா ஆதாரம்


https://www.youtube.com/watch?v=VaF3UFZrY_I&app=desktop

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback