அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் என்றால் என்ன? எப்படி பதிவு செய்வது ? முழு விவரம்
அட்மின் மீடியா
7
தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது.
விவசாயத் தொழிலாளர் நலவாரியம்
மீனவர் நலவாரியம்
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம்
சீர்மரபினர் நலவாரியம்
பழங்குடியினர் நலவாரியம்
ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நலவாரியம்
பனைமரத் தொழிலாளர் நலவாரியம்
காலணித் தொழிலாளர் நலவாரியம்
கைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் நலவாரியம்
தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம்
நரிக்குறவர் நலவாரியம்
உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்
கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியம்
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்
அருந்ததியர் நலவாரியம்
கட்டட தொழிலாளர்கள் நலவாரியம்
புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நலவாரியம்
அச்சக தொழிலாளர் நலவாரியம்
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலவாரியம்
தமிழ்நாடு வணிகர்கள் நலவாரியம்
தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நலவாரியம்
தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம்
திரைத் தொழிலாளர் நலவாரியம்
மண்பாண்டம் தொழிலாளர் நலவாரியம்
ஊனமுற்றோர் நலவாரியம்
அரவாணிகள் நலவாரியம்
முடி திருத்துவோர் நலவாரியம்
தையல் தொழிலாளர் நலவாரியம்
ஓவியர் நலவாரியம்
கொரோனா வைரஸ் காரணமாக நீடித்துவரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த தொகையானது, கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு, தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்க முடிவு செய்திருப்பதோடு இந்த நிவாரண தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்துள்ளது.
வங்கி விவரங்களை அளிக்காத நடப்பில் உள்ள தொழிலாளர்கள் உடனடியாக விவரங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசி ஓய்வூதிய திட்டத்தில் சேர உங்கள் அருகில் உள்ள CSC பொது சேவை மையங்களை அணுகி, தங்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஜன்தன் கணக்கு, 'பாஸ்புக்' ஆகியவற்றை காண்பித்து, தங்கள் பெயர்களை பதிவுசெய்யலாம்.
Tags: முக்கிய அறிவிப்பு
intha scheme name enna Sir
ReplyDeleteHello sir,I want to join the welfare sangh because I am a Electrician and i living in North Chennai so please send address or contact number in welfare office.thankyou
ReplyDeleteSirஇத்திட்டத்தில் சேருவது
ReplyDeleteஊனமுற்றோர் நலவாரியத்தில் பதிவு செய்வது எப்படி
ReplyDeleteShare auto Driver
ReplyDeleteHow can I join this sangh I'm marketing executive service
ReplyDeleteHow can I change my bank account details
ReplyDelete