Breaking News

FACT CHECK:இலவச லேப்டாப் என்னும் வதந்தி செய்தியினை யாரும் நம்பாதீர்கள்.......

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தமிழக அரசு இலவசமா லேப்டாப் தருகிறது லேப்டாப் வேண்டும் என்பவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். ஒருவருக்கு ஒன்று மட்டுமே என்று  ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?



நாம் தேடியவரையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இது போன்ற ஒரு அறிவிப்பை இதுவரை வெளியிடப்படவில்லை. 

அப்படியே இலவசமாக தருவதாக இருந்தாலும் இது போன்ற சாதாரண லிங்க் மூலமாக பதிவு செய்யுங்கள் என்று சொல்லமாட்டார்கள் மாறாக அதற்கென்று ஒரு   தனி வழிமுறைகளை ஏற்பாடுகள் செய்வார்கள்

இது போன்ற பொய்யான லிங்க் மூலமாக உங்கள் தகவல்களை நீங்களே யாருக்கும் கொடுத்து விடாதீர்கள் என்று அட்மின் மீடியாவின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tag: Goverment providing free laptop for youth   Goverment providing free laptopfake news

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback