FACT CHECK: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடைக்க ஆன்லைனில் அப்ளை செய்யனுமா? யாரும் நம்பாதீங்க
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,பள்ளி &கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவச லேப்டாப் வழங்குவதாகவும் , அதனைப்பெற இந்த இணைப்பில் விபரம் அளிக்கவும் என்றுஒரு பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள்முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது
முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...
இந்த மாதிரி செய்திகளை எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.
இதுவரைக்கும் எந்த நிறுவனமும் ஆதாரபூர்வமாக யாருக்குமே இதுபோன்ற இலவசமாக லிங்கின் மூலம் கொடுத்ததில்லை
இரண்டாவது எச்சரிக்கை அவசியம்
இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்
மூன்றாவதாக கவனம் தேவை
எந்த ஒரு நிறுவனமும் சோஷியல் நெட்வேர்கில் இது போன்ற link அனுப்பாது.
அந்த வெப்சைட்டில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றாலே தெரியும் இது ஒரிஜினல் கிடையாது இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.
இது போன்ற
பொய்யான செய்திகளால் உங்கள்
தகவல் திருடப்படலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மை
எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்
அட்மின் மீடியா ஆதாரம்
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,பள்ளி &கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவச லேப்டாப் வழங்குவதாகவும் , அதனைப்பெற இந்த இணைப்பில் விபரம் அளிக்கவும் எனக்கூறி வங்கி விபரங்களை கேட்கும் புதிய மோசடி அரங்கேற துவங்கியுள்ளது .
— Arjun Saravanan (@ArjunSaravanan5) September 24, 2020
மக்களே இத்தகைய செய்திகளை புறந்தள்ளுங்கள்.
கவனம் தேவை.#ScamAlert pic.twitter.com/F6PJx6abpd
Tags: FACT CHECK மறுப்பு செய்தி