இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி? how to download death certificate
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். தமிழக அரசின் விதிமுறைகளின் படி, 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல், ஒவ்வொரு இறப்பும் 7 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தில், பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்கள் பெறுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த, 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், இணையதளத்தில் அப்லோடு செய்து பொதுமக்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2018 ம் ஆண்டுக்கு பிறகு இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?
- நீங்கள் இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்ய முதலில் http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp அதிகார பூர்வ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்
- அடுத்து அதில் ஆண், அல்லது பெண், இறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் இறந்த மருத்துவமனை ஆகியன சரியாக பூர்த்தி செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள்
- அடுத்து மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவையும் பதிவு செய்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
- அடுத்து வரும் பட்டியலில் பெயர் பார்த்து தேடி பிரிண்ட் கொடுங்கள் இறப்பு சான்றிதழ் ரெடி
குறிப்பு:-
நீங்கள் 2018 ம் ஆண்டுக்கு முன்னால் அதாவது From 1910 to 2017 ம் ஆண்டு வரை உள்ள இறப்பு சான்றிதழ் டவுன் லோடு செய்ய https://tnurbanepay.tn.gov.in/ இந்த லின்ங்கை கிளிக் செய்து அதில் முதலில் sign up என்பதை கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து லாகின் ஜடி பெறுங்கள் அதன்பின்பு லாகின் ஜடி வைத்து லாகின் செய்து அதில் services என்பதை கிளிக் செய்து அதில் பிரிண்ட் இறப்பு சான்றிதழ் என்பதை கிளிக் செய்து அதில் ஆண், அல்லது பெண், இறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் இறந்த மருத்துவமனை ஆகியன சரியாக பூர்த்தி செய்து இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
சென்னையில் பிறந்தவர்களுக்கான பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/09/blog-post_38.html
தமிழகம் முழுவதும் பிறந்தவர்களுக்கான பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/09/how-to-download-birth-certificate-online.html
Tags: முக்கிய செய்தி