FACT CHECK: டிசம்பரில் 6 நாட்கள் உலகம் இருளில் முழ்கும் என பரவும் வதந்தி!! உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டிசம்பரில் 6 நாட்கள் உலகம் இருளில் முழ்கும் எனவும் டிசம்பர் மாதம் 16 ம் தேதி சூரிய புயல் அடிக்கும் 22 ம் தேதி வரை இது நீடிக்கும் இதனால் உலகம் இருளில் முழ்கும்
என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி தற்போதைய செய்தி இல்லை
ஆண்டு தோறும் பரவும் பொய்யான செய்தி இது யாரும் நம்பவேண்டாம்
அந்த செய்தி கடந்த 2014, மற்றும் 2015, 2017, 2019 ம் ஆண்டுகளில் பரவலாக பரவியது
ஆனால் அது போல் எதுவும் நடக்கவில்லை நாசாவும் அந்த செய்தியினை மறுத்துள்ளது
உலகம் இருளில் மூழ்குமா?
சூரிய புயல் என்பது சூரியனில் அவ்வப்போது ஏற்படும் ஒரு நிகழ்வு.
இதனால் பூமிக்கு ஏதேனும் அபாயம் ஏற்படுமா என்றால், அதற்கு சாத்தியம் குறைவுதான் ஏனெனில் அதன் வெப்ப துகள்கள் வழி மண்டலங்களை தாண்டி பூமிக்கு வருமுன்னே கரைந்து விடும். அதனால் இது குறித்து பயப்பட தேவையில்லை.
சூரிய புயலால் அதிகம் அடித்தால் உலகில் மின்சாரம் தடைபடும் என்பதும், அதனால் உலகில் இருள் ஏற்படும் என்பதும் கணிப்பே அன்றி வேறில்லை.
எனவே இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
சில ஊடகங்கள் மற்றும் வாட்ஸப் பேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் ஆய்வில்லாமல் இது போன்ற தகவலை பரப்பி பீதியை கிளப்பி வந்தனர்
எனவே மக்களே தெளிவான முறையில் சிந்தித்து உண்மையை உணருங்கள்.
ஒரு செய்தி கேள்விபட்டால் அதை ஆராயாமல் ஆர்வமாக ஷேர் செய்யும்
நண்பர்களே இனியாவது சிந்தியுங்கள்.
நாம் எதை ஷேர் செய்ய வேண்டும்
எதை ஷேர் செய்யகூடாது
எதை ஷேர் செய்தால் மக்கள் பயன் பெறுவார்கள்.
எதை ஷேர் செய்தால் மக்கள் பயப்படுவார்கள்
என ஆராய்ந்து உண்மை தன்மையை அறிந்து ஷேர் செய்யுங்கள்
இந்த வாட்ஸ்ஆப் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
இனிவரும் காலங்களில் நன்மை ஏவி தீமை தடுக்க பயன் படுத்துவோம்.
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
http://www.ariviyal.in/2014/11/blog-post_7.html?m=1
https://timesofoman.com/article/no-truth-about-earth-witnessing-dark-days-in-december
Tags: FACT CHECK மறுப்பு செய்தி