Breaking News

குழந்தையை சட்டப்படி தத்து எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

அட்மின் மீடியா
0

நீங்கள் குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும் இந்த வழிமுறை சற்று நடைமுறை தாமதங்கள் நிறைந்தது. ஆனாலும் சட்டரீதியாக பாதுகாப்பானது. எனவே, உத்திரவாதமானது. உறவினர்கள், நண்பர்கள் மூலமாக தத்துக்கிடைக்க வாய்ப்பு இல்லாத தம்பதிகள் அரசிடம் பதிவு செய்து இந்த முறை மூலம் தத்து பெறலாம்.

                                                        image courtesy google

வாங்க குழந்தையை சட்டப்படி தத்து எடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம்?

குழந்தையை தத்து எடுக்க தகுதிகள்:

  • தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

  • திருமணம் ஆனவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

  • தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

  • தனி ஆண்மகன், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.

  • திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.

குழந்தை தத்தெடுப்பு செயல்முறைகள்:

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆனலைனில் பதிவு செய்ய வேண்டும். அடுத்து அதில் உங்கள் 

உடற்தகுதி சான்று, 

திருமண பத்திரிகை / திருமண பதிவுச்சான்று, 

பான்கார்டு, 

வாக்காளர் அடையாள அட்டை, 

தம்பதியர் புகைப்படம், 

வருமானச்சான்று, 

நற்சான்றிதழ் (காவல் துறையிடமிருந்து பெறப்படவேண்டும்)

ரேஷன் அட்டை.

மேலும் விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் குழந்தை கிடைக்கவில்லை என்றால் 2 ஆண்டுகளுக்கு  பிறகு மீண்டும் ஆன்லைனில் புதுப்பிக்க வேண்டும்.

அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட அனாதை இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும்.

தாங்கள் விரும்பும் குழந்தையை தேர்வு செய்ய முடியும்.

இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.

அடுத்ததாக சட்ட விதிமுறைப்படி நடவடிக்கையினை சிறப்புத் தத்தெடுக்கும் நிறுவனம் மேற்கொள்ளும். இறுதியாக நீதிமன்ற ஆணை பெற்று குழந்தையைத் தத்தெடுத்த பெற்றோரிடம் ஒப்படைக்கப் படும்.

தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும்.இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப்பெற்றுக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

குழந்தை தத்தெடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க

http://cara.nic.in/

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

1800 111 311

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback