Breaking News

FACT CHECK RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஒவைசி இருக்கும் புகைபடம் உண்மையா?? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் RSS கூடாரத்தில் பாரளுமன்ற சிங்கத்துக்கு என்ன வேலை ? தேர்தல் செலவிற்க்கு முதலாளியைபார்க்க வந்திருப்பாரோ என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

 
 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் கடந்த 20.12.2021 இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின்  இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பகவத் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது
 
இந்த தகவலை இந்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறைக்கான மத்திய இணை அமைச்சர். ராஜஸ்தானை சேர்ந்த அர்ஜூன் ராம் மெஹ்வால் தன் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 


ஆனால் சிலர் அந்த புகைபடத்தை சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் புகைபடத்தை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து  ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி புகைப்டத்தை வைத்து பொய்யாக பரப்பி வருகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
 

 

அட்மின் மீடியாவின் ஆதாரம்
 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback