Breaking News

FACT CHECK ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கதீட்ரல் தேவாலயத்தை மசூதியாக மாற்றி ஒப்படைத்தார் என பரவும் செய்தி உண்மை என்ன??

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மாஸ்கோவின் கதீட்ரல் தேவாலயத்தை மசூதியாக  மாற்றி ரஷ்யாவின் கிராண்ட் முஃப்தியிடம் ஒப்படைத்துள்ளார்  என ஒரு செய்தியையும் வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றார்கள்




அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ள கேள்வி என்னவென்றால் அங்கிருந்த தேவாலயத்தை இடித்து மாற்றி மசூதி கட்டினாரா என்றால் இல்லை என்பதே பதில்

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் உள்ள அந்த கதீட்ரல் மசூதி கட்டிடக் கலைஞர் நிகோலாய் ஜுகோவின் வடிவமைப்பின்படி 1904 இல் கட்டப்பட்டது 

மசூதியின் பொறுப்பாளர்கள் அந்த மசூதி கட்டிடம் பலம் இழந்ததால் அந்த மசூதியை இடித்து புதிய மசூதி கட்ட முடிவெடுத்து அந்த பழைய மசூதி கடந்த 11.09.2011 அன்று இடிக்கபட்டது

அதன்பின்பு அங்கு புதிய மசூதி கட்டிமுடிக்கபட்டு கடந்த 23.09.2015 அன்று  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்  உட்பட பலர் கலந்து கொண்டு அன்று அந்த புதிய மசூதி திறக்கபட்டது ஆகும்

அந்த வீடியோவை தற்போது பொய்யாக பரப்பி வருகின்றார்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://en.wikipedia.org/wiki/Moscow_Cathedral_Mosque

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=w0m9E8wKPO8

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback