Breaking News

FACT CHECK திருநள்ளாறு கோவில் கோபுரம் மேல் செயற்கைக்கோள்கள் பறக்கும்போது ஸ்தம்பிக்கிறதா?- பல ஆண்டுகளாகப் பரவும் வதந்தியின் உண்மை என்ன…

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நாசா வியந்த அதிசயம் திருநள்ளாறு கோயிலை கடக்கும்போது செயற்கைக்கோள்கள் செயலிழக்கின்றன என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

திருநள்ளார் சனிபகவான் கோவிலின் வான்பகுதியை கடக்கும் போது எந்த ஒரு செயற்கைக்கோளும் மூன்று நிமிடங்கள் செயலிழக்க நேரிடும் . அதற்கான காரணம் சனிக்கோளில் இருந்து கண்களுக்கு புலப்படாத கருநீலக்கதிர்கள் அக்கோவிலின் மீது ஒவ்வொரு நொடியும் விழுந்து கொண்டே இருக்கின்றன . அக்கதிர்களின் அடர்த்தியானது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நடைபெறும் சனிபெயர்ச்சியின் போது 45 நாட்கள் அதிகமாக இருக்கும் .இதனால் அப்பகுதியை கடக்கும் செயற்கைக்கோள்கள் செயலிழக்குமே தவிர பழுதடையாது . அதன் பின் நாசா திருநள்ளாரில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது . மனிதனுக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பது நிரூபனம் ஆகியுள்ளது . என ஷேர் செய்து வருகின்றார்கள்

பலரும் இந்த தகவலை அடிக்கடி சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள், மேலும் சில திரைப்படங்களில் கூட வந்துள்ளது அப்படி பட்ட இந்த செய்தி முமுமையான பொய்யான செய்தியாகும்

இந்த தகவல்பற்றி இஸ்ரோ இயக்குனராக பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது திருநள்ளாறு கோயில் மீது செயற்கைக் கோள்கள் செல்லும்போது எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை; அதனை நானே எனது குழுவினரை வைத்து பிரத்யேகமாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறேன் என்று மயில்சாமி அண்ணாதுரை தெளிவாகக் கூறியுள்ளார். 

எனவே, உண்மைத்தன்மை தெரியாமல் சமூக வலைதளங்களில் நீண்ட நாளாக இந்த தகவலை பலரும் ஷேர்செய்து வருகிறார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 

https://www.youtube.com/watch?v=qO_bCdAtSvY

 

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=5DfWEnbE5ss

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback