Breaking News

FACT CHECK குடியரசு தின அலங்கார ஊர்தி மாதிரியில் கருணாநிதியின் உருவம் என பரவும் புகைப்படம்- உண்மை என்ன...

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பாதுகாப்புத்துறை அமைச்சகம் சொன்னபடி ஊர்தியை வடிவமைக்காமல் இது போன்று வடிவமைத்தால் எப்படி அனுமதி தருவார்கள் ??? சுதந்திர போராட்ட தியாகிகளை வைத்து ஊர்தியை வடிவமைக்க சொன்னால், பின்னாடி மஞ்சள் துண்டு போட்டுகிட்டு ஒருத்தர் நிக்கிறாரே ?!அவரு எந்த சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டாரு என்று  ஒரு புகைப்ப்டத்தை  சிலர் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

2022-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கு தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், ராணி வேலு நாச்சியார், மகாகவி பாரதியார் மற்றும் மருது சகோதரர்களை சித்தரிக்கும் அலங்கார ஊர்தியினை மத்திய அரசு ஏற்க்கவில்லை என செய்தி கடந்த வாரம் வந்தது அதனை தொடர்ந்து அதிரடியாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், குடியரசு தின விழாவில் மத்திய அரசு அனுமதி தராத வ.உ.சிதம்பரனார்,மகாகவி பாரதி, வேலுநாச்சியார், நிற்கும் மருதுசகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழக அரசின் குடியரசு தின விழாவில் காட்சி படுத்தப்படும் என அறிவித்தார்

 

இந்நிலையில் சிலரும் ஓர் புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றார்கள் அதில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சொன்னபடி ஊர்தியை வடிவமைக்காமல் இது போன்று வடிவமைத்தால் எப்படி அனுமதி தருவார்கள் ??? சுதந்திர போராட்ட தியாகிகளை வைத்து ஊர்தியை வடிவமைக்க சொன்னால், பின்னாடி மஞ்சள் துண்டு போட்டுகிட்டு ஒருத்தர் நிக்கிறாரே ?!அவரு எந்த சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டாரு என்று  ஒரு புகைப்ப்டத்தை  சிலர்  ஷேர் செய்து  வருகின்றார்கள்.

 

போட்டோஷாப் செய்து பொய்யாக ஷேர் அந்த புகைப்படத்தின் அசல் புகைப்படம் டெல்லியை மையமாக கொண்டு செய்திகளை வழங்கும் புதியதலைமுறையின் பத்திரிக்கையாளர் நிரஞ்சன் என்பவர் தனது டிவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

 

அந்த பதிவில் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள நிராகரிக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன்,மகாகவி பாரதி,குதிரையில் இருக்கும் வீரமங்கை வேலுநாச்சியார், வீரவாளுடன் நிற்கும் மருதுசகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்தியின் மாதிரி என அந்த புகைப்படம் உள்ளது ஆனால் அதில் மஞ்சள் நிற சட்டையில் கலைஞரின் உருவம் இடம்பெறவில்லை. 

 

யாரோ சிலர் வேண்டும் என்றே அந்த புகைப்படத்தை கருணாநிதி புகைபடத்தை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து மாற்றி இருக்கிறார்கள்


 
மேலும் தந்தி டிவி நியூஸ் டெப்லட்டில் காங்கிரஸ் எம்பி. கார்த்திக் சிதம்பரம் அவர்கள் குடியரசு தின அணிவகுப்பிற்கு தமிழகத்தின் சார்பாக அனுப்பபட்ட வாகனத்தில் கருனாநிதி சிலையை தவிர்த்திருக்கலாம் என கூறியதாக சிலர் பதிவிட்டு வருகின்றார்கள் அந்த செய்தியினை தந்தி டிவி மறுத்துள்ளது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 

https://twitter.com/ThanthiTV/status/1484440128009367553/photo/1

 

 

 அசல் புகைப்படம்.....

 

https://twitter.com/niranjan2428/status/1484061111544856585

 

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback