Breaking News

FACT CHECK இலும்மினாட்டிகள் காலில் விழுந்த போப் என பரவும் வீடியோ உண்மை என்ன???

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  உலகமே போப் காலில் விழும்,கையில் முத்தமிடும்.- ஆனால் போப் உலகை ஆள்பவர்களின் காலில் விழவேண்டும்.கையில் முத்தமிட வேண்டும். இது இலும்மினாட்டிகளின் சட்டம். அரிய காணொளி என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் போப் தானா?

போப் அவர்கள் எதற்க்காக அவர்கள் காலில் விழுந்தார் ?

யார் அவர்கள் ? இலும்மினாட்டிகளா?  என்ற  கேல்விகளுக்கான விடையை பார்ப்போம்

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 11.04.2019 அன்று நடந்தது ஆகும், மேலும் அந்த வீடியோவில் உள்ளது  போப் தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை மேலும் அவர் பெயர் பிரான்சிஸ் ஆகும் அவர் 16 வது பெனடிக்காக இருந்தார் 

போப் காலில் விழுந்தது இலும்மினாட்டிகள் இல்லை அவர்கள் சூடான் நாட்டு அதிபர்கள் ஆவார்கள்

உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்று. சூடான் ஆகும் அங்கு 2011-ல் சூடானிலிருந்து பிரிந்தது தெற்க்கு சூடான் என்ற புதிய நாடு உருவானது

இதன்பிறகு, 2013ம் ஆண்டு முதல் அங்கு புரட்சி, போராட்டம், கலவரம், என உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ரெய்க் மச்சார் ஆகியோர் நடுவேயான நீண்ட கால பனிப்போர்தான் இந்த உள்நாட்டு போருக்கான காரணம் என கூறப்படுகின்றது

இந் நிலையில்தான், போப் பிரான்சிஸ் அவர்கள் தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், எதிர்க்கட்சித் தலைவர் ரியக் மச்சார் மற்றும் 3 துணை அதிபர்கள் வாடிகன் வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது அப்போது திடிரென அனைவரின் காலில் விழுந்து, முத்தமிட்ட போப், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டினார். போப்பின் இந்த எதிர்பாராத செயலால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.போப் பிரான்சிஸ், மனிதாபிமான அடிப்படையில், இவ்வாறு ஒரு செயலை செய்தார்

இந்த செயலை கொச்சைப்படுத்தி பார்த்தீங்களா, போப் இலும்மினாட்டிகள் காலில் விழுகின்றார் என பொய்யாக இலர் வேண்டும் என்றே பரப்புகின்றார்கள் 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



அட்மின் மீடியா ஆதாரம்:-



அட்மின் மீடியா ஆதாரம்:-




Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback