Breaking News

FACT CHECK ஊரடங்கு தொடர்பாக வலம் வரும் சென்ற வருட தந்திடிவி வீடியோ......யாரும் நம்பாதீங்க

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் பலரும்  கொரானா ஊரடங்கு சம்மந்தமாக தந்தி டிவியின் வீடியோ ஒன்றை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 05.05.2021 அன்று தமிழக அரசால் போடபட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகும்

கடந்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி தமிழக அரசால் அறிவிக்க பட்ட தளர்வுகள் மேமாதம் 6 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது , அந்த செய்தியும் தற்போது ஜனவரி 5 ம்தேதி விதிக்கபட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 6 ம்தேதிமுதல் அமலுக்கு வருகின்றது 

அந்த 6ம் தேதி ஒற்றுமையை வைத்து பலரும்  பலரும் அந்த வீடியோ செய்தி தற்போதைய ஊரடங்கு செய்தி என பரப்புகின்றார்கள்

இந்த செய்தி குறித்து தந்தி டிவியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஊரடங்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் மேற்கண்ட தந்தி டிவி வீடியோ கடந்த ஆண்டு(2021) ஊரடங்கின் போது ஒளிபரப்பானது. தற்போதைய செய்தி அல்ல என பதிவிட்டுள்ளது

மேலும் தற்போதைய ஊரடங்கு செய்தி தந்திடிவியில் ஒளிப்பரப்பனது இதுதான் https://www.youtube.com/watch?v=ETOGaojmjmY


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://twitter.com/ThanthiTV/status/1478698509024989188


https://www.youtube.com/watch?v=ftQx8oCAuwU


 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback