FACT CHECK கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போலீஸ் மீது கல் வீசியவர்கள் என பரவும் வீடியோ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கர்நாடக மாநிலத்தில் போலீஸார் மீது ஹிஜாப் போட்டுக்கொண்டு கல்லெறிந்தவர்கள் ஐ போலீசார் பிடித்து பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்திய காட்சி என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கர்நாடகாவில் நடந்தது கிடையாது
பலரும் ஷேர் செய்யும அந்த வீடியோ கடந்த 08.08.2020 அன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள குர்னூல் மாவட்டத்தில் பர்தா அணிந்து சட்டவிரோதமாக மது கடத்தியவர்கள் ஆவார்கள்
மேலும் வீடியோவில் இடம்பெற்ற பர்தா அணிந்த அந்த நபர் தெலங்கானாவில் இருந்து ஆந்திராவின் குர்னூல் பகுதிக்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தி சென்ற போது பிடிபட்டார். அப்போது உடையை களைத்து மது பாட்டில்களை எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. அந்த வீடியோவில் புர்கா பகுதியை மட்டும் கட் செய்து பொய்யாக பரப்புகின்றார்கள்,
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி