FACT CHECK இமய மலையில் 200 ஆண்டுகள் வாழும் துறவி வீடியோ...உண்மை என்ன.....
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இமய மலையில் 200 ஆண்டுகள் ஒரு இந்து மத துறவி வாழ்ந்து வருகிறார் என்றும் அவர் சிவ நாமத்தையே உணவாக கொண்டு வாழ்ந்து வருகிறார் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் 200 ஆண்டுகளாக இமயமலையில் வாழவில்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் உணவு உண்ணாமல் சிவ நாமத்தை மட்டும் கூறி உயிர் வாழ்கின்றார் என்பதும் பொய்யானது ஆகும்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் தாய்லாந்தில் உள்ள பிராக்ரு அகா சந்தாசாரோ என்ற புத்த மத துறவி ஆவார் மேலும் அவருக்கு வயது 109 ஆகும் என அவரது கொள்ளு பேத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.instagram.com/auyary_sry/
Tags: FACT CHECK மறுப்பு செய்தி