FACT CHECK ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
பலரும் ஷேர் செய்யும் செய்தி உண்மையில் நடந்திருந்தால் மீடியாக்களில் வந்திருக்கும் , அப்படி சமீபத்தில் ஜசோதா பென் கட்சிகளில் இணைந்ததாக செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்தபோது அதுபோன்று எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 2017 ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் பள்ளி ஒன்றில் பிரதமரின் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
https://www.youtube.com/watch?v=-J_m5ggxlaY
Tags: FACT CHECK மறுப்பு செய்தி