FACT CHECK புர்ஜ் கலிபாவில் கர்நாடக மாணவி முஸ்கான் படம் திரையிடப்பட்டதா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வீரப்பெண்மணி அல்லாஹ் அக்பர் என்று துணிவுடன் கூறி உலகப்புகழ அடைந்து விட்டாய் உன் வீரத்தை அல்ஜசீரா முதலில் துவக்க் வைத்தது தற்போது எமிரேட்ஸ் கொண்டாடி உன் புகழை பாடுகின்றது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையில் புர்ஜ் கலிபாவில் திரையிடபட்டது கிடையாது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ யாரோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்
அந்த வீடியோவை பார்த்தாலே தெரியும் அதில் முஸ்கான் எனறு எழுதியுள்ள அந்த எழுத்துக்கள் கடைசி வரை அப்படியே இருக்கும், மேலும் முஸ்கான் புகைப்படமும் அப்படியே இருக்கும், மேலும் புர்ஜ் கலிபா டவரை தாண்டி முஸ்கான் படம் இருக்கும் எனவே அந்த வீடியோ உண்மை கிடையாது
மேலும் புர்ஜ் கலிபாவில் ஏதேனும் லைட் ஷோ திரையிட்டால் அதனை அவர்களது டிவிட்ட்ர், பக்கத்தில் பதிவிடுவார்கள் , ஆனால் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் கடைசியாக 2022 ம் ஆண்டு நியூ இயர் வீடியோ தான் உள்ளது . எனவே பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பொய்யானது ஆகும்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி