FACT CHECK குஜராத்தில் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் இந்து பெண் படுகொலை என ஷேர் செய்யப்படும் வீடியோ....உண்மை என்ன????

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் குஜராத்தில் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள யாரும்  முஸ்லீம் கிடையாது

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது பொய்யான செய்தியாகும், 

பலரும் ஷேர் செய்யும் அந்த சம்பவம் கடந்த 13.02.2022 அன்று குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் நடைபெற்றது ஆகும், 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் க்ரிஷ்மா நந்தலால் வெகாரியா என்றும் கொலை செய்த நபரின் பெயர் பெனில் பங்கஜ் கோயானி என்றும்  இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாக படித்து வந்துள்ளார்கள் என்றும்  பங்கஜ் கோயானி க்ரிஷ்மாவை ஒருதலை காதல் செய்துள்ளார்,மேலும் தன்னை காதலிக்கும்படி பங்கஜ் கோயானி தொடர்ந்து க்ரிஷ்மாவை வற்புறுத்தி வந்துள்ளார். 

ஆனால் க்ரிஷ்மா மறுக்கவே அவரை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான் பங்கஜ் கோயானி அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று குஜராத்தை சேர்ந்த தேஷ் குஜராத் என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது, மேலும் பல ஊடகங்களிலும் செய்தி வெளிவந்துள்ளது

அதில் இருவரில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை,  ஆனால் சிலர் அந்த சம்பவத்தை பொய்யாக கற்பனை கலந்த கதையோடு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.deshgujarat.com/2022/02/13/a-brutal-murder-that-has-shocked-surat/


https://www.youtube.com/watch?v=qEOLx104t1s

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback