FACT CHECK ஏ.ஆர்.ரஹ்மான் மகள் இந்தியாவில் புர்க்காவுடன்,வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் உள்ள புகைப்படம் என பரவும் வதந்தி??? உண்மை என்ன
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த பதிவில் உள்ள புகைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் பக்கத்தில் உள்ள புர்க்கா போட்ட பெண் தான் அவரது மகள் கதிஜா ஆகும்
மார்டன் டிரஸ்ஸில் உள்ள பெண் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களது மகள் கிடையாது, அவரது பெயர். தஸ்லிமா நஸ்ரின் ஆவார் கடந்த 2013ம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியே இந்திய வீசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுட்டிருந்தார்.
தஸ்லிமா நசுரீன் வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார் இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு திரும்பினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் கூறும் போது நான் ஒரு நாத்திகன், என்னை முஸ்லீம் என்று சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
https://twitter.com/taslimanasreen/status/315751057877766145
Sitting outside Indian embassy in NYC, hoping to get an Indian visa. #Nostalgia pic.twitter.com/d5NaUOssya
— taslima nasreen (@taslimanasreen) March 24, 2013
Tags: FACT CHECK மறுப்பு செய்தி