FACT CHECK இஸ்லாமிய பெண்கள் மீது மாணவர்கள் தண்ணீர் ஊற்றி துரத்தும் வீடியோ சம்பவம் எங்கு நடந்தது ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இஸ்லாமிய பெண்கள் மீது தாக்கும் கும்பல் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த வீடியோவில் பல ஆண்களுக்கு மத்தியில் இஸ்லாமிய பெண்கள் பயந்து ஓடி வர
அந்த ஆண்கள் இஸ்லாமிய பெண்கள் மீது நீரை ஊற்றும் படி உள்ளது அந்த
வீடியோவில் பேசுபவர்கள் தமிழில் பேசுவதால் இது தமிழ்நாட்டில் நடந்தது போல்
பலரும் ஷேர் செய்துகொண்டுள்ளார்கள்
ஆனால் அந்த வீடியோ சம்பவம் கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலை கழகத்தில் நடந்தது கல்லூரியில் நடந்த ராகிங் செயலாகும்
இது இசுலாமிய மாணவிகளுக்கு மட்டும் நடந்தது போல் உள்ளது ஆனால் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவ மாணவிகளை ராக்கிங் செய்துள்ளார்கள்
குறிப்பிட்ட வீடியோவில் முஸ்லிம் பெண்களை மட்டும் ராகிங் செய்வது போல் சித்தரித்து உள்ளது ஆனால்
அங்கு படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நடந்தது
அவர்கள் அனைவரையும் சஸ்பென்ட் செய்யபட்டுள்ளர்கள்
மேலும் இந்த செய்தியினை பலரும் கடந்த 2019 ம் ஆண்டு ஷேர் செய்தார்கள் அப்போதும் அட்மின் மீடியா அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்ட செய்தியினை படிக்க
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி