FACT CHECK: கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் என்று கூறிய பெண் இவர் தான் என பரவும் வீடியோ - உண்மை என்ன...
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் *அல்லஹூ அக்பர்* என்று கத்திய பெண் இவர்தான்.புர்கா அணிந்து கொண்டு தான் வருவோம் என்று போராட்டம் நடத்திய புண்ணியவதி. என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கர்நாடகாவில் ஹிஜாப், காவித்துண்டு விவகாரம் தலைதூக்கிய நேரத்தில் மாண்டியா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் புர்கா அணிந்து வந்த முஸ்லீம் மாணவி ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கல்லூரிக்கு செல்லும் வேளையில் காவித்துண்டு அணிந்து கொண்டு சிலர் ” ஜெய் ஸ்ரீராம்” எனக் கோசமிட்டுக் கொண்டு இருந்த சில ஆண் மாணவர்களை பார்த்து ” அல்லா-ஹூ-அக்பர் ” என குரல் எழுப்பி கையை உயர்த்தி சென்றார். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியது.
கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மறித்த மாணவர்களுக்கு முன்பாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு, ஹிஜாப் அணிந்து சென்ற பெண் இவர்தான் என்று பரவுகின்ற புகைப்படம் அனைத்தும் பொய்யானது ஆகும்.
ஏற்கனவே இதுபோல் சமூகவலைதளங்களில் சில புகைப்படங்கள் இவர் தான் அவர் என பரவியது அப்போது நம் அட்மின் மீடியா அந்த புகைப்படங்கள் பொய்யனது என மறுப்பு செய்தி வெளியிட்டது
அந்த வரிசையில் இந்த வீடியோவும் பொய்யானது ஆகும்,
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பெண் பெயர் Urfi Javed ஆவர்
இவர் லக்னோவை சேர்ந்தவர்,
அவர் ஒரு டிவி நடிகை ஆவார்,
ஹிந்தி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 ல் கலந்து கொண்டுள்ளார்
kஅர்நாடகாவில் உள்ள முஸ்கான் என பரவும் வீடியோ உணமியில்லை, எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
பலரும் ஷேர் செய்யும் வீடியோவின் அசல்
Urfi Javed பற்றி விக்கிபீடியாவில்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி