FACT CHECK யார் இந்த பெண் முஸ்கானா??? ஹிஜாப் அணிந்த DSP யா உண்மை என்ன????
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஹிஜாப் அணிந்த டி எஸ்பி காவல் அதிகாரி என்றும் , கர்நாடகாவை சேர்ந்த அல்லாஹூ அக்பர் என கூறிய முஸ்கான் என்று வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சர்வதேச
மகளிர் தினத்திற்கு கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி ஆகும் அதனை முன்னிட்டு பெண்களை
நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு தனித்துவமான
முயற்சியில், மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒரு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டார்.
மல்காபூர்
தாலுகாவில் உள்ள ஜில்லா பரிஷத் உருது உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த
சஹ்ரிஷ் கன்வால், என்ற ஓர் இஸ்லாமிய சிறுமி ஒரு நாள் டிஎஸ்பியாகப்
பொறுப்பேற்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர அந்த சிறுமி அந்நாளில் தீர்மானித்தார்,
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
https://timesofindia.indiatimes.com/city/nagpur/international-womens-day-girls-to-act-as-collector-sp-for-a-day/articleshow/74491950.cms
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=VaF3UFZrY_I&app=desktop
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி