Breaking News

FACT CHECK முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை தீயிட்டுக் கொளுத்தும் போது எரிந்த பெண்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன???

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை, தீயிட்டுக் கொளுத்தி  தானும்  கருகிப் போகும் சங்கிகளில்  நிலைமையை  பாரீர் .....நாடு நாசமா  போகும் நிலைமையை பாரீர்.....  மனிதனை ஆட்டிப்படைக்கும் மதவெறி ஆர் எஸ் எஸ் பாஜகவின் செயலால் நாடே அதிர்ச்சி.....         ‌‌மக்களை ஜாதி, மதத்தின் பெயரால்... பிரிக்கும் சக்திகளை... விரட்டும் காலம் மிக விரைவில்..... வருகிறது.....என்று  ஒரு செய்தியினையும் வீடியோவையும் பலர் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை, தீயிட்டுக் கொளுத்தவில்லை
 
அந்த வீடியோவில் உள்ள சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்றது காரணம், பஞ்சாப்பில்  தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வேண்டி  நீண்ட காலமாக அங்கு போராட்டம் நடத்தி வந்தார்கள். 2010 ஜனவரி மாதம் போராட்டம் நடத்திய தற்காலிக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அமைச்சரின் இல்லத்தை நோக்கிச் சென்ற இந்த கும்பலை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ஆசிரியர்கள் 5 பேர் தண்ணீர் தொட்டியில் ஏறி அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தங்களைத் தாங்களே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்
 
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://timesofindia.indiatimes.com/india/Protesting-teacher-sets-herself-afire/articleshow/5546793.cms 

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=AhUT5hQFrVY 

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback