FACT CHECK ஆப்கானிஸ்தானில் டச் போன்களுக்கு அனுமதி கிடையாது அவற்றை அழிக்கும் வீடியோ உண்மை என்ன?????
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியில் டச் போன்களுக்கு அனுமதி கிடையாது அவற்றை அழிக்கும் வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி ஆப்கானிஸ்தானில் டச் போன் உபயோகிக்ககூடாது என்று தலிபான்கள் போன்களை அழிக்கும் வீடியோ கிடையாது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவிற்க்கும் ஆப்கானிஸ்தானிற்க்கும் சம்மந்தம் கிடையாது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பாகிஸ்தானில் கடந்த 31.12.2021 அன்று பாகிஸ்தான் சுங்க இலாகா அதிகாரிகள் அந்நாட்டில் செல்போன், மதுபாட்டில்கள், என கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக முறையற்று வரும் பொருட்களை ஆண்டுதோறும் பொது இடத்தில் வைத்து அழிக்கும் காட்சி தான் அது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி