FACT CHECK பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கும் இஸ்லாமிய மாணவி என பரவும் செய்தியின் உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைவரையும் தாக்கும் இஸ்லாமிய மாணவி என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பெண் முஸ்லீம் பெண் கிடையாது, அந்த பெண்ணின் பெயர் கனிகா புபேந்தர் சேக்ரி, அவர் இஸ்லாமியர் அல்ல,
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் 26.01.22 குடியரசு தினத்தன்று மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள லோதா அமரா குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வாகும்.
அன்றைய தினம் இதுபற்றி அப்பகுதி மக்கள், அந்த பெண் மீது கபுர்பாவ்டி போலீசில் புகார் அளித்துள்ளனர். எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=5sCkUIyr-MQ
Tags: FACT CHECK மறுப்பு செய்தி