அசைவ உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை.அசைவ உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழக அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்துறை டெண்டரில் சைவ உணவகங்களில் மட்டுமே பங்கேற்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொலைதூர அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கான ஓட்டல்களை முடிவு செய்ய பகிரங்க போட்டியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, ஓட்டல்களுக்கான நிபந்தனைகளை தமிழக போக்குவரத்துறை நேற்று வெளியிட்டிருந்தது.
போக்குவரத்துறை நிபந்தனையை நீக்கியதால் அரசு பஸ் நிற்கும் ஓட்டலில் சைவ, அசைவ உணவுகளை தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்