Breaking News

FACT CHECK பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என கோஷம் என பரவும் வீடியோ உண்மை என்ன!!!!

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமராக்க வேண்டும் என பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பரிந்துரையின் போது எம்பிக்கள் “மோடி மோடி ” என கோசமிட்ட வீடியோவை என பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என முழங்கியதாக கூறுவது முற்றிலும் தவறான தகவலாகும் 

பலரும் ஷேர் செய்யும் வீடியோ பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எடுக்கபட்ட வீடியோதான் மேலும் அந்த வீடியோ தற்போது நடந்தது இல்லை 

அந்த வீடியோ பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 26.10.2020 அன்று நடந்தது ஆகும் 

கடந்த 26.10.2020 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி  அவர்கள் கடவுள் வழிபாடு மற்றும் மதங்களை இழிபடுத்துவது பற்றி நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்தார் 

அப்போது எதிர்தரப்பினர் “voting voting ” என முழங்கினார்கள் அதற்க்கு  சபாநாயகர்  வாக்கு  நடைபெறும், அமைதியாக இருங்கள் கூறுவார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=8biDVN8dp3A

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback