FACT CHECK உக்ரைன் பிணங்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன????
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உக்ரைன் செய்தியாளர் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒரு பிணம் தனது மேல் போர்த்தியிருந்த பாலிதீன் ஷீட்டை சரிசெய்கின்றது ஆக அங்கும் விலைபோய் மக்களை திசை திருப்பும் ஊடக சதி செயல்படுகின்றது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும அந்த வீடியோ உக்ரைனில் நடந்தது இல்லை
பலரும் ஷேர் செய்யும அந்த வீடியோ கடந்த 04.02.2022 அன்று ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் காலநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் அது
அந்த போராட்டகாரர்கள் இறந்தவர்கள் போல் வரிசையாக படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
உக்ரைன் மீதான ரஷ்யா போர் 24.02.2022 அன்றுதான் அதிகாரபூர்வமாக துவங்கியது ஆனால் இந்த சம்பவம் அதற்க்கு முன்னதாக நடைபெற்றது
ஆனால் சிலர் அந்த சம்பவம் உக்ரைனில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி