FACT CHECK காஷ்மீர் பைல்ஸ் திரைபடத்திற்க்கு பின் முஸ்லீம் கடை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பரவும் வீடியோ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் 👆காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு பிறகு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என சொல்லப்படுகிறது , அல்ஹம்துலில்லாஹ் அதனை தைரியமாக எதிர்கொண்ட நம் சகோதரர்கள் MAASHA ALLAH என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 15.03.2022 அன்ரு குஜராத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்றது ஆகும்
சூரத்தின் பாத்தே பகுதியில் உள்ள உமியா மாதா கோவில் அருகே கடை வைத்திருந்த கடைக்காரரிடம் தவனை முறையில் பொருட்கள் கேட்டதற்க்கு வாய்தகறாறு கைகலப்பில் முடிந்துள்ளது, தவனை முறையில் பொருட்கள் கேட்டு கொடுக்கவில்லை என ஆத்திரத்தில் வாய்தகறாறு செய்தவர்கள் மீது போலிஸில் புகார் கொடுக்க இருந்தார்கள் திடிரென அவர்கள் கத்தி கட்டை போன்றவைகளை கொண்டு அவர்களை தாக்கியுள்ளார்கள், மேலும் அவர்கள் கடைகாரரும், தவனை கேட்டவரும் இஸ்லாமியர்கள் தான் அனைவரும் இஸ்லாமியர்கள் தான் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://twitter.com/News18Guj/status/1505579672129916930
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி