Breaking News

FACT CHECK செல்லமுத்து சர்பத் சம்பந்தமாக பரவும் செய்தி பொய்யானது யாரும் நம்பாதீர்கள் ? உண்மை என்ன! முழு நிலவரம்...

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அஸ்ஸலாமு அலைக்கும்.... நோன்பாளிகளே எச்சரிக்கை.நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் அதிகம் பருகப்படும் இந்த *செல்லமுத்து சர்பத்* இந்துத்துவ தீவிரவாதி *RSS* நபரால் நடத்தப்படும் ஒரு நிறுவனம் தற்ப்போது இதில் இஸ்லாமியர்களின் நோன்பை கெடுக்க மாட்டின் மூத்திரம்(கோமியம்) கலக்கப்பட்டு வருகிறது இதை பருகி நம் நோன்பின் மாண்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம் மேலும் அல்லாஹ் தன் திருமறை அல்குர்ஆனில் கூறுகிறான் ஹராமான உணவை உண்ணாதீர்கள் பருகாதீர்கள் என்று முஸ்லிம்களைப் பொறுத்தவரை சிறுநீர் அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! உள்ளது இதை பருகுவதும் ஹராமாகும் ஆதலால் *RSS ன் *செல்லமுத்து சர்பத்தை தவிர்ப்போம்*இந்த செய்தியை மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லி ஹராமான உணவை தடுப்பதின் மூலம் நன்மையை பெறுவோம். என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ள விஷயம் இரண்டு ஆகும்
 
1. R.S.S நபரால் நடத்தப்படுகின்றது என்பது

2. சர்பத்தில் மாட்டு கோமியம் கலக்கின்றார்கள் என்பது


ஆனால் அதில் கூறப்பட்டுள்ள செய்தி இரண்டும் முற்றிலும் தவறானது ஆகும்
 
 நம் அட்மின் மீடியா சார்பாக அங்கு நேரில் சென்று விசாரித்த வரையில் யாரோ வேண்டும் என்றே பொய்யாக அது போல் பரப்பியுள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது
 
மேலும் செல்லமுத்து சர்பத் நிறுவனம்  நிறுவனம் கடந்த 1940 ம் ஆண்டு முதல் பரமக்குடியில் இயங்கி வருகின்றது
 
அதன் நிறுவனர் செல்லமுத்து காலத்திற்க்கு பிறகு அவரது மகன் செல்வராஜ் என்பவர் தற்போது நடத்தி வருகின்றார், அந்த நிறுவனத்தில் இஸ்லாமியரும் பணி செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த ஊரில் உள்ள ஜமாத்தார்களிடமும் ,இஸ்லாமிய கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோதும் அந்த செய்தி பொய்யானது என்றே கூறினார்கள்
 
மேலும்  செல்லமுத்து சர்பத் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் செல்லமுத்து அவர்களின் மகளும், தற்போதைய உரிமையாளர் செல்வராஜ் அவர்களின் சகோதரி அவர்கள்  இஸ்லாமியராக மாறியுள்ளார், 
 
அவரும் அதே பரமக்குடியில் தான் வசித்து வந்துள்ளார் அவர் 2017 ம் ஆண்டு இறந்த பிறகு அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்துள்ளார்கள். 
 
மேலும் இந்த சம்பவம்  குறித்து செல்லமுத்து சர்பத் நிர்வாகம் சார்பாக காவல்துறையிலும், சைபர் கிரைமிலும் புகார் அளித்துளார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback