சவுதியில் கழிவறையில் 30 ஆண்டுகளாக சமோசா தயார் செய்த உணவகம் சீல்வைப்பு
அட்மின் மீடியா
0
சவுதியில் கழிவறையில் 30 ஆண்டுகளாக சமோசா தயார் செய்த உணவகம்- உணவகம் மூடி சீல்வைப்பு
கோப்பு படம்சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது இந்நிலையில் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டனர்.அப்போது அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. உணவகத்தில் இறைச்சி மற்றும் சீஸ் போன்ற காலாவதியான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியதை ஜித்தா நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர்.சட்ட விதிகளை மீறியுள்ளது தெளிவாக அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.இதனை தொடர்ந்து அந்த உணவகம் பூட்டப்பட்டு உள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்