Breaking News

FACT CHECK கிணறு தோண்டும் போது தண்ணீர் வெளியேறி 5 பேர் இறந்தார்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன??

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள அசாத்பூர் (ரங்கர்வசானி), கானாபூர் (சிச்கேடா) கிராமத்தில் விவசாயி மகேந்திர பகத் என்பவரது வயலில் கிணறு தோண்டும் போது திடீரென தண்ணீர் பீரிட்டு வேகமாக வெளியேறியதால் கிணற்றில் பணிபுரிந்த 5 தொழிலாளர்கள் அங்கேயே உயிரிழந்தனர். யாரும் அருகில் நிற்க முடியாத அளவுக்கு தண்ணீர் வேகமாக வெளியேறுவது. இது இயற்கையின் அதிசயம் என்று கூறப்படுகிறது. என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யப்படும் அந்த செய்தி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள அசாத்பூர் (ரங்கர்வசானி), கானாபூர் (சிச்கேடா) என்ற இடத்தில் நடந்தது ஆகும்


கிணறு தோண்டும் போது தண்ணீர் வேகமாக வெளியேறி 5 தொழிலாளர்கள் இறந்தனர் என பரவும் செய்தி பொய்யானது.  

அது போல் உண்மையில் ஒரு சம்பவம் நடைப்பெற்றது என்றால், அந்த மாநிலத்தில் மிக பெரிய செய்தியாக பரவியிருக்கும். ஆனால்  எந்தப் பத்திரிகையிலும், சேனலிலும் இதைப் பற்றிய எந்தச் செய்தியையும் காணவில்லை. மாறாக ஆதாரமற்ற பொய் செய்தி தான் பரவியது.

இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில https://checkpostmarathi.com/ என்ற இணையதளம் அந்த செய்தியின் உண்மை என்ன என்று  வெளியிட்டுள்ளது


அதில் சம்பவம் நடந்ததாக பரப்பப்பட்ட  அசேகான் பூர்ணா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பாட்டீலிடம் கேட்கும் போது, வைரலாக பரவும் இந்த வீடியோவுடன் கூறப்படும் செய்தி பொய்யானது, 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், இது குறித்து காவல் நிலையத்துக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் வீடியோவை கவனமாகப் பார்த்தால், கிணறு தோண்டினால், பாறைகள் மண் அளவுக்கு அதிகமாக இருக்கும் இதில் தண்ணீர் வெளியேறினால் பாறைகள் மற்றும் மணல்களின் தடுப்பால் அதிக அழுத்ததில் அதுபோல் தண்ணீர் அடிக்காது.
  
பூமியில் பள்ளம் தோண்டி  தண்ணீர் பைப் லைன் உடைந்தால் மட்டுமே இதுபோன்ற தண்ணீர் அதிக அழுத்ததில் வெளியேற வாய்ப்பு உள்ளது. 

எனவே அந்த வீடியோவை காட்டி 5 பேர் உயிரிழப்பு என்பது பொய்யான செய்தி.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback