FACT CHECK கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைகுறைவு மருந்து கலந்த பிரியாணி விற்பனை என பரவும் வதந்தி...யாரும் நம்பாதீர்கள்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்ற முஸ்லீம்கள் கைது என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்..அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
பலரும் ஷேர் செய்யும் செய்தியில் 3 புகைப்படங்கள் உள்ளது
முதல் புகைப்படம்
போலிஸார் பின்புறம் சிலர் உள்ளது போல் உள்ள புகைப்படம் கடந்த 11.07.2019 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் சட்டவிரோதமான முறையில் மதராஸா உள்ளே ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்
இரண்டாவது புகைப்படம்
கூகுள் சென்று மாத்திரைகள் என டைப் செய்தால் அது போல் பல்லாயிரம் புகைப்படங்கள் வரும்
மூன்றாவது புகைப்படம்
பிரியாணி பாத்திரத்துடன் உள்ளவர் Videosmylive - Best Indian Food Cooking Channel !! பிரபல யூடியூப் சேனலில் கடந்த 01.07.2016 அன்று வெளிவந்த பிரியாணி செய்வது எப்படி என்பதில் வைத்துள்ள தம்நில் போட்டோவாகும்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=QJrWViyOw68
Tags: FACT CHECK மறுப்பு செய்தி