FACT CHECK உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி ஏற்றி வந்ததாகக் கூறி....இளகியமனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என பரவும் வீடியோ உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி ஏற்றி வந்ததாகக் கூறி முஸ்லிம் இளைஞரை உயிரோடு தோலை உரித்து, இதயத்தை அறுத்து வெளியே எடுத்து சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்த காவிகள். *இலகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்* என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை, அது போல் நடந்திருந்தால் பல ஊடகங்கள் அந்த செய்தியினை வெளியிட்டுக்கும்
மேலும் அந்த சம்பவம் பற்றி நாம் பல கட்ட தேடுதல்களுக்கு பிறகு நமக்கு கிடைத்த ஆதாரத்தை வைத்து பார்க்கும் போது அந்த வீடியோ சம்பவம் இந்தியாவில் நடந்தது இல்லை என்று உறுதியாக கூறலாம்,
மேலும் கடந்த 20.01.2018 அன்று மெக்சிகோவில் நடந்த சம்பவம் ஆகும் ஆக பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது நடந்தது இல்லை என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்
போதை கடத்தல் கும்பல்கள் தங்கள் போதை பொருள் கடத்த இடையூறாக இருந்த கிராமவாசிகள் இருவரை பிடித்து உயிருடன் இருக்கும் நிலையில்
ஒருவரின் கழுத்தை அறுத்தும், மற்றொருவரின் நெஞ்சை அறுத்து இதயத்தை வெளியே எடுத்தும் கொடூர கொலை செய்தததை வீடியோ எடுத்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு 'போதை தொழிலுக்கு இடையூறு செய்பவர்களின் நிலை இது தான் என எச்சரிக்கை செய்யும் விதமாக வீடியோவை வெளியிட்டனர்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ மெக்சிகோ நாட்டில் நடந்தது ஆனால் இங்கு அந்த வீடியோவை வைத்து பொய்யாக தலைப்பு செய்தி அளித்து ஷேர் செய்கின்றார்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி