Breaking News

FACT CHECK தொழுகைக்கு இடையூறு என ரயில் நிலையததை அடித்து உடைத்தார்கள் என பரவும் வீடியோ!!! உண்மை என்ன???

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மமம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் நவாப்ரோ மகிசாசூர் என்ற ஊரில் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தையும் பெயர்த் தெடுத்து ரயில்வே நிலையத்தையும் உடைத்தார்கள். காரணம் தெரியுமா? அவர்கள் நமாஸ் செய்வதற்கு ரயில் சத்தம் இடையூராக இருக்கிறதாம். என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் ஒரு ரயில் நிலையத்தை ஒரு கும்பல் கட்டையால் அடித்து சேதபடுத்துகின்றார்கள் அதில் NAOPARA MAHISHASUR  ரயில் நிலையம் என உள்ளது 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் மேற்க்கு வங்கத்தில் கடந்த 2019 ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த NRC,CAA  போராட்டத்தில் எடுக்கபட்ட வீடியோ ஆகும் 

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் நமாஸ் செய்வதற்கு ரயில் சத்தம் இடையூராக இருக்கிறதாம் என புதியதாக கதை கட்டி பரப்பி வருகின்றார்கள்   சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=999330663733604&id=100009700384597

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback