FACT CHECK மானை சுட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் உபாத்யா என பரவும் வீடியோ உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யா பூங்காவில் மான்களை வேட்டையாட கற்றுக்கொண்டிருக்கிறார். இதை வைரலாக்குங்கள். அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும் வரை......என்று ஒரு வீடியோவுடன் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள சம்பவம் நடந்தது கடந்த
26 .06. 2015 ம் ஆண்டு ஆகும்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள சம்பவம் நடந்த இடம் பங்களாதேஷ் நாடு ஆகும்
அந்த மானை சுடும் நபர் பங்களாதேஷில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மொயின் உதீன் என்பவர் ஆவார்...
அவர் பங்களாதேஷில் பெரிய பண்ணை வைத்துள்ளார் அந்த பண்ணையில் மாடு,மான்,மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ அவரது பன்னையில் அவர் வளர்த்த அவருடைய சொந்த மான் தான் அதை அவர் உணவுக்காக சுட்டுள்ளார். மேலும் அவர் துப்பாக்கி சுடுவதற்கு, பண்ணை வைப்பதற்கு என அனைத்திற்கும் முறையான உரிமம் வைத்துள்ளார்.
மேலும் அனில் உபாத்யா என்று ஒரு எம் எல் ஏ காங்கிரஸ் ,மட்டும் இல்லை வேறு எந்த கட்சியிலும் அதுபோல் பெயரில் ஒரு எம் எல் ஏ கிடையாது
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 2019 ம் ஆண்டு பாஜக எம் எல் ஏ அனில் உபாத்யா மானை சுட்டார் என பரவியது அப்போதும் நம் அட்மின் மீடியா அந்த செய்தி பொய்யனது என மறுப்பு செய்தி வெளியிட்டது
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.facebook.com/moin.uddin.125/posts/1032885623420942?pnref=story
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=YA2nflr088c&has_verified=1
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=YA2nflr088c&has_verified=1
2019 ம் ஆண்டு அட்மின் மீடியா செய்தி
Tags: FACT CHECK மறுப்பு செய்தி