பொய்யான செய்தி பரப்பாதீர்கள்!!!!
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் 3 ம் தேதி பசவ ஜெயந்தியை முன்னிட்டு கறிகடைகள் (இறைச்சி)இருக்காது எனவே இன்றே கறி(இறைச்சி) வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என ஒரு செய்தி பரவி வருகின்றது
பலரும் ஷேர் செய்யும் இந்த செய்தி தமிழகத்திர்க்கு பொருந்தாது மே 3 ம் தேதி ரமலான் என தமிழக காஜி அவர்கள் அறிவித்துள்ளார், மேலும் மே 3 ம் தேதி தமிழகத்தில் எந்த அறிவிப்பும் இல்லை
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த பசவ ஜெயந்தி கர்நாடகாவில் லிங்காயத்துகளால் கொண்டாப்படும் ஒர் பண்டிக்கையாகும், மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கர்நாடகவிற்க்கு உரியது ஆகும்,
பசவ ஜெயந்தி என்றால் என்ன?
பசவ ஜெயந்தி என்பது பசவண்ணாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள லிங்காயத்துகளால் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். மேற்கூறிய மாநிலங்களில் இது அரசு விடுமுறை தினமாகும்
இந்த செய்தி அங்கு பலராலும் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அங்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனம் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது
அதில் அந்த செய்தி ஒரு வதந்தி ஆகும் என்றும் அரசு அது போல் எந்த வித தடையும் விதிக்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது
பொதுவாக கர்நாடகாவில் இறைச்சி கடைகளுக்கு தடை நாட்களாக கீழ் கண்ட நாட்கள் மட்டுமே இருக்கின்றன
தியாகிகள் தினம் (ஜனவரி 3)
மகாசிவராத்திரி (மார்ச் 1)
ஸ்ரீ ராம நவமி (ஏப்ரல் 10)
மகாவீர் ஜெயந்தி (ஏப்ரல் 14)
புத்த பூர்ணிமா (மே 16)
கிருஷ்ண ஜென்மாஷ்டமி (ஆகஸ்ட் 19)
விநாயக சதுர்த்தி (ஆகஸ்ட் 31)
காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)
சாது வாஸ்வானி ஜெயந்தி (நவம்பர் 25)
அதில் பசவ ஜெயந்தி நாளுக்கு இறைச்சி தடை என கர்நாடக அரசு அறிவிக்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு:-
Tags: FACT CHECK