FACT CHECK இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் 30,628 ரூபாய் உதவி தொகை என பரவும் செய்தி???? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் A message with a link 'https://bit.ly/3P7CiPY' is doing the rounds on social media and is claiming to offer a financial aid of ₹30,628 in the name of the Ministry of Finance to every citizen. என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்தி:-
இந்திய மக்கள் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை பரிசீலனை செய்த நிலையில், அவர்களது கஷ்டத்தை குறைக்கும் வகையில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30,628 உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியினை மத்திய அரசு வெளியிடவில்லை.
இந்த செய்தி போலியானதாகும்.
குடிமக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்த செய்தி உண்மையானதல்ல என்று மத்திய அரசின் பிஐபி (பிரஸ் இனஃபர்மேஷன் பீரோ) சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் பிஐபி வெளியிட்டுள்ள செய்தியில், “சமூக ஊடகங்களில் https://bit.ly/3P7CiPY என்ற லிங்க்-ஐ குறிப்பிட்டு செய்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தலா ரூ.30,628 நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி போலியானது. மத்திய நிதியமைச்சகம் அதுபோல எந்தவொரு உதவியையும் வழங்கவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி