Breaking News

FACT CHECK திருமணம் ஒரு பாவச்செயல் என மோகன் பகவத் கூறியதாக பரவும் செய்தி உண்மை என்ன....

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  திருமணம் ஒரு பாவச்செயல்! ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் செய்துக் கொள்வதால்தான் குழந்தை பிறக்கிறது. கர்மாவின் பலனை அனுபவித்து அல்லலுறுகிறது. இந்துக்கள் திருமணம் செய்வதை தவிர்த்தால், கர்மாவிலிருந்து தப்பலாம். ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் விவாகரத்து செய்வது நல்லது. என் யோசனையின்படி மோடி அப்படித்தான் செய்தார். என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக ஜூனியர் விகடன் செய்தி நியூஸ் கார்டு என்று  ஒரு புகைப்படத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.  

 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளத்தில் பரவிவரும் செய்தி:-
 
 
திருமணம் ஒரு பாவச்செயல்! ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் செய்துக் கொள்வதால்தான் குழந்தை பிறக்கிறது. கர்மாவின் பலனை அனுபவித்து அல்லலுறுகிறது. இந்துக்கள் திருமணம் செய்வதை தவிர்த்தால், கர்மாவிலிருந்து தப்பலாம். ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் விவாகரத்து செய்வது நல்லது. என் யோசனையின்படி மோடி அப்படித்தான் செய்தார். என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாக ஜூனியர் விகடன் செய்தி நியூஸ் கார்டு என்று  ஒரு புகைப்படத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.  
 
 
உண்மை என்ன:-
 
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்யும் அந்த செய்தி குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்ப்டத்தை ஆராய்ந்தது, மேலும் அந்த புகைபடத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் பொய்யானது என்றும், அது எடிட் செய்யப்பட்டது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

  
ுழு விவரம்:-
 
மோகன் பகவத் இந்துக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறியிருந்தால் ஊடகங்களில் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். அப்படி ஏதும் செய்தி வரவில்லை
 
நாம் தேடியவரையில் கடந்த 29.04.2022 அன்று  அன்று மோகன் பகவத் புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் tஹன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது அதில் 
 
வன்முறையால் எந்த பயனும் இல்லை! வன்முறையால் இங்கு யாருக்கும் எந்த பயனும் இல்லை. வன்முறையை விரும்பும் சமுதாயம் தற்போது தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.
 
பலரும் ஷேர் செய்யும அந்த நியூஸ் கார்டு ஜூனியர் விகடன் வெளியிடவில்லை என இதில் இருந்து தெரிகின்றது

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த திருமணம் செய்யக் கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என பரவும் செய்தி ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டினை போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டு ஆகும்


முடிவு:-


பலரும் ஷேர் செய்யும் அந்த திருமணம் செய்யக் கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என  ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டு ஆகும் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/JuniorVikatan/photos/5163433123694357

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback