Breaking News

FACT CHECK பாலஸ்தீன இளைஞர்களை குழியில் தள்ளி துப்பாக்கியால் சுட்டு....என பரவும் வீடியோ... உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பாலஸ்தீனத்தில் நடந்த படுகொலை,  ரம்ஜான் நோன்பு நோற்காததற்காகவும்,ரம்ஜான் தொழுகைக்கு வராததாலும் சுட்டுக் கொல்லப்பட்டா அப்பாவிகள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?



சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

பாலஸ்தீனத்தில் நடந்த படுகொலை, ரம்ஜான் தொழுகை ரம்ஜான் நோன்பு நோற்காததற்காக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று  ஒரு வீடியோ அதில் ரானுவ உடையில் சிலர் கண்ணை கட்டி மக்களை ஒரு பெரிய குழியில் தள்ளி விட்டு அவர்களை துப்பாக்கியால் சுடுகின்றார்கள் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சிரியாவில் 2013 ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் எடுக்கபட்டது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


முழு விவரம்:-


கடந்த 2013 ம் ஆண்டு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகில் உள்ள டாடமோனில் படுகொலைகள் நடைபெறுவதைக் காட்டும் வீடியோ காட்சிகளுடன் தி கார்டியன் இனையதள செய்தி நிறுவனம் கடந்த 28.04.2022 அன்று தன் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

சிரியாவின் இராணுவ உளவுப்பிரிவின் 227வது பிரிவினால் இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த படுகொலையில் 41 இறந்தார்கள் எனவும் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.



சிரியா உள்நாட்டுபோர் காரணம்:-

சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 

போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை அதிபர் அல்-அசாத்தின் ஆட்சியில் உள்ளது குறித்து குற்றச்சாட்டுகளை வைத்தனர். தந்தை ஹஃபீஸிற்கு பிறகு, 2000ஆம் ஆண்டில், அதிபரானார் அல்-அசாத்.

2011ஆம் ஆண்டின் மார்ச் மாதம்,  டமாகஸ்சில் ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒரு கண்டன போராட்டம் நடைபெற்றது. இத்தகைய போராட்டங்களை செய்வோரை நசுக்க, அரசு தனது படைகளை பயன்படுத்த, அதிபர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கியன.

போராட்டங்கள் வெடித்தன. முதலில் தற்காப்பிற்காகவும், பிறகு தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை விரட்டி அடிக்கவும், எதிரணியை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். `அந்நிய சக்தியின் உதவிகளை பெற்றுள்ள பயங்கரவாதிகளை` முழுமையாக நசுக்கி நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வருவேன் என்று அதிபர் உறுதிமொழி அளித்தார்.

இந்த வன்முறைகள் மிக விரைவிலேயே அடுத்த நிலைக்கு சென்று உள்நாட்டு போராக மாறியது. அரசின் படைகளை எதிர்கொள்வதற்காக, நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்தனர்.

சுருக்கமாக சொல்லப்போனால், அதிபரின் ஆதரவுப் படைகளுக்கும், எதிரானவர்களுக்கு இடையிலான போர் என்ற வடிவத்தை இந்த போர் தாண்டியிருந்தது.

சிரியாவின் அதிபராக பதவியேற்றது முதலே கிளர்ச்சியாளர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராக போரை அறிவித்தனர். பஷாருக்கு எதிராக ஐஎஸ் இயக்கமும், குர்திஷ் இனத்தவரும் போரை அறிவித்தனர். பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் சிரியாவில் ஷியா முஸ்லிமான பஷார் அல் ஆசாத் ஆட்சி செய்வதை எதிர்த் தரப்பு விரும்பவில்லை என்பதும் சிரிய உள்நாட்டுப் போருக்கு முக்கியக் காரணமாகியது. தனக்கு எதிராகப் பேசியவர்களை பஷர் கைது செய்தார். இதனால் ஆஸாத்துக்கு எதிராகப் பல இயக்கங்கங்கள் உருவானது

மக்கள் மீது பஷர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.  கலவரக்காரர்கள் பலர் கொல்லப்பட்டர்கள் அப்போது ஆரம்பித்த உள்நாட்டு போர் முதல் தற்போதுவரை நடைபெற்றுவருகின்றது

இந்த உள்நாட்டுப் போரினால் 2011 முதல் தற்போது வரை சுமார் 4 லட்சத்துக்கு அதிகமானோர் இறந்துள்ளனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக வெளியெறி உள்ளார்கள்

11 ஆண்டுகளாக நடக்கும் சிரிய போர் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.தற்போது 12ம் ஆண்டை எட்டியுள்ளது


முடிவு:-

2013 ம் ஆண்டு சிரியா உள்நாட்டு போரில் நடந்த  படுகொலையை தற்போது ரமலான் நோன்பு வைக்காதவர்கள், தொழுகைக்கு செல்லாதவர்கள் என பொய்யாக தலைப்பிட்டு ஷேர் செய்யப்படுகின்றது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



சிரியாவின் தற்போதைய நிலை 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback