FACT CHECK மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த புகைப்படம் என பரவும் செய்தி !!! உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இலங்கையில் தன் சொந்த மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த புகைப்படம் இது என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்படத்தை ஆராய்ந்தது, மேலும் அந்த புகைபடத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்றும் அந்த புகைப்படம் 2004 ம் ஆண்டில் எடுக்கபட்டது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
அண்டைநாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவு பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியது, வரலாறு காணாத விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கிஉள்ளது.
இதற்க்கு முழு முதற்காரணம் ராஜபக்சே குடும்பமே என இலங்கை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் ராஜபக்சேயின் அலுவலகம் எதிரே எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களை அரசு ஆதரவாளர்கள் தாக்கி விரட்டினர். இதனால் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமுற்றனர். போராட்டக்காரர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தது மேலும் மக்கள் போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது.ராஜபக்சே குடும்பத்துடன் திரிகோணமலையில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
இந்நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் பலரும் இலங்கையில் தன் சொந்த மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த புகைப்படம் இது என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
ஆனால் அந்த புகைப்படம் 2004ம் ஆண்டு இந்த படத்தை தமிழ் நெட் என்ற இணையதளத்தில் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது
அதில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்நாட்டுப் போர் நடந்து வரும் போர் முணையில் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழிகளைப் பார்வையிட்ட படம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது
முடிவு:-
இலங்கையில் தன் சொந்த மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த புகைப்படம் ஷேர் செய்யும் புகைபடம் 2004 ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என இதில் இருந்து தெளிவாகிறது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி