Breaking News

FACT CHECK பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பு கொள்ளுங்கள் என பரவும் செய்தி உண்மை என்ன!!!!

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று  ஒரு சில மொபைல் எண்களை பதிவீட்டு ஒரு செய்தியினை ஷேர் செய்து  வருகின்றார்கள்.





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும் முடிந்தவரை இந்த செய்தியை அனுப்பவும். உங்கள் உதவி குழந்தையின் வாழ்க்கையை மாற்றும். அவசியம் படித்து மற்றவர்களுக்கு அனுப்பவும்…பிரார்த்தனை செய்யும் கரங்களை விட உதவும் கரங்கள் மேலானது.என சுமார் 20 க்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த மொபைல் எண்கள் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அதில் உள்ள மொபைல் எண்களுக்கு போன் செய்து பார்த்ததில் அதில் உள்ள எந்த  ஒரு மொபைல் எண்ணும் வேலை செய்யவில்லை, சுவிட்ச் ஆப், தொடர்பில் இல்லை என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


முழு விவரம்:-


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியினை பலரும் யாருக்காவது உதவும் என்ற நோக்கில் அதில் உள்ள மொபைல் எண்களை சோதிக்காமல் அப்படியே பார்வர்டு செய்து விடுகின்றார்கள்

ஆனால் நீங்கள் செய்யும் அந்த உதை யாருக்கும் பிரயோஜனம் படாமல் உள்ளது, 

உண்மையில் யாருக்காவது உதவி தேவைப்பட்டு போன் செய்து பார்த்தால் அவர்களை ஏமாற்றுவது போல் ஆகிவிடும், மேலும் இது போல் யாரவது உணமியில் உதவுபவர்கள் செய்தி வந்தால் கூட சந்தேக கண் கொண்டு பார்க்க நேரிடும் மேலும் இதுபோன்ற செய்திகளை பகிர்வதால் உங்கள் குரூப்பின் நம்பகத்தன்மை கேள்வி குறியாக மாற வாய்ப்பு உள்ளது. 

உங்களுக்கு ஒரு செய்தி வந்தால் அதனை தீர விசாரித்து உண்மை என்றால் மற்றவர்களுக்கு பதிவிடுங்கள் இல்லை என்றால் ஷேர் செய்யாதீர்கள்  


முடிவு:-



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

அதில் உள்ள ந்த நம்பருக்கும் போன் போகவில்லை அதுதான் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback