FACT CHECK ஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இதுதான் ஞானவாபி மசூதியின் சிவலிங்கம் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில் கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய போது 12.8 அடி உயரமுள்ள சிவலிங்கம் தெரிந்தது. இப்போது வெளியே உள்ள பெரிய நந்திக்கு நேர் எதிரில் சிவலிங்கம் உள்ளது. நந்தியம் பெருமானின் இடைவிடாத தவம் வெற்றி பெற்று விட்டது … இது தான் 12 அடி லிங்கம் கண்டெடுக்கப்பட்ட காசி ஞானவாபி மசூதி என ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
இதுதான் ஞானவாபி மசூதியின் சிவலிங்கம் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில் கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய போது 12.8 அடி உயரமுள்ள சிவலிங்கம் தெரிந்தது. இப்போது வெளியே உள்ள பெரிய நந்திக்கு நேர் எதிரில் சிவலிங்கம் உள்ளது. நந்தியம் பெருமானின் இடைவிடாத தவம் வெற்றி பெற்று விட்டது … இது தான் 12 அடி லிங்கம் கண்டெடுக்கப்பட்ட காசி ஞானவாபி மசூதி என ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த சிவலிங்கம் புகைப்படம் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்ப்டத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இல்லை மாறாக ஒடிசாவில் உள்ள பாலசோர் புசண்டேஷ்வர் 12 அடி உயரம் உள்ள சிவலிங்கம் புகைப்படம் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் புகைப்படம் இல்லை ஒடிசாவில் உள்ள பாலசோர் புசண்டேஷ்வர் 12 அடி உயரம் உள்ள சிவலிங்கம் புகைப்படம் ஆகும் odisha bhusandeswar temple கீழ் உள்ள ஆதாரம் லின்ங்கில் உள்ள யூடியூப் வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்