FACT CHECK ஞானவாபி மசூதி ஒளு செய்யும் இடம் இதுதான் என பரவும் புகைப்படம் உண்மையா???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஞானவாபி மசூதியில் கிடைத்த சிவலிங்கம் என பொய்யாக பரப்புகின்றார்கள் , இது இஸ்லாமியர்கள் ஒளு செய்யும் இடம் அது சிவலிங்கம் இல்லை, அது வாட்டர் பவுண்டைன் என ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஞானவாபி மசூதியில் கிடைத்த சிவலிங்கம் என பொய்யாக பரப்புகின்றார்கள் , இது இஸ்லாமியர்கள் ஒளு செய்யும் இடம் அது சிவலிங்கம் இல்லை, அது வாட்டர் பவுண்டைன் என ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி புகைப்ப்டம் கிடையாது அது கொல்கத்தாவில் உள்ள நகோடா பள்ளிவாசல் என என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் புகைப்படம் இல்லை கொல்கத்தாவில் உள்ள நகோடா பள்ளிவாசலில் உள்ள ஒளு செய்யும் இடம் ஆகும்
Nakhoda Masjid kolkata வில் உள்ள மிகவும் பழமையான பளிவாசல் ஆகும் கீழ் உள்ள ஆதாரம் லின்ங்கில் உள்ள யூடியூப் வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி