FACT CHECK மக்காவில் ஜின் தொழுகை செய்ததா? வைரல் வீடியோவின் உண்மை என்ன??
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ALLAHU AKBAR!
Inside the Ka'abah, the adhaan was called, iqaamah then salaah up to the end but there was no one inside.
People think that ALLAH's Angels were the ones praying and ALLAH knows best.
Happened last Friday 13th May 2022
ALLAHU AKBAR!!!
என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
ALLAHU AKBAR!
Inside the Ka'abah, the adhaan was called, iqaamah then salaah up to the end but there was no one inside.
People think that ALLAH's Angels were the ones praying and ALLAH knows best.
Happened last Friday 13th May 2022
ALLAHU AKBAR!!!
அதாவது தமிழில் அல்லாஹு அக்பர்! காபாவின் உள்ளே, அதான் என்று அழைக்கப்பட்டது, இகாமத் பின்னர் இறுதி வரை சலாஹ் என்று அழைக்கப்பட்டது, ஆனால் உள்ளே யாரும் இல்லை. அல்லாஹ்வின் தூதர்கள் தான் பிரார்த்தனை செய்தார்கள் என்றும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை 13 மே 2022 நடந்தது அல்லாஹு அக்பர்!!!
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 28.04.2022 அன்று மெக்காவில் காபாவின் கதவு திறக்கப்பட்டது அப்போது துருக்கி,செனிகல் நாட்டு பிரதமர் மற்றும் உள்ளூர் தலைவர்கள் காபாவை உள் நுழைந்து பார்த்தார்கள் என என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து மக்கா ஹரமை சேர்ந்த அதிகாரபூர்வ செய்தி அளிக்கும் Haramain Sharifain டிவிட்டர் பக்கத்தில் காபாவில் "அமானுஷ்ய நடவடிக்கைகள்" குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ தவறானது.ஹராமுக்கு வருகை தந்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவருக்காக கபாவின் கதவு திறக்கப்பட்ட ரமழானிலிருந்து காணொளி. என அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் நாம் யூடிப்பில் அது சம்மந்தமாக தேடியபோது பல வீடியோக்கள் நமக்கு கிடைத்துள்ளது , அதனையும் கீழே ஆதாரத்தில் இணைத்துள்ளோம்,
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி