Breaking News

FACT CHECK சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் என பரவும் வீடியோ உண்மையா????

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் இறைச்சி 100% ஃபாண்டா ஃபிளெஷ் மெட்டீரியல் சிலிகான் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யும். ஆன்மா / ஆவி இல்லை. உணவு தேவையில்லை. இதன் சந்தை விலை ரூ.200000 + வரியுடன் "HOORI" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் எந்த மொழியையும் 99% துல்லியத்துடன் பேச முடியும். இந்திய இளைஞர்களை குறிவைத்து இந்த "ஹூரி"யை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரதட்சணை இல்லை... ஜாதகம் இல்லை என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

சமூக வலைதளத்தில் பரவிவரும் செய்தி:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில்  சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் இறைச்சி 100% ஃபாண்டா ஃபிளெஷ் மெட்டீரியல் சிலிகான் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யும். ஆன்மா / ஆவி இல்லை. உணவு தேவையில்லை. இதன் சந்தை விலை ரூ.200000 + வரியுடன் "HOORI" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் எந்த மொழியையும் 99% துல்லியத்துடன் பேச முடியும். இந்திய இளைஞர்களை குறிவைத்து இந்த "ஹூரி"யை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரதட்சணை இல்லை... ஜாதகம் இல்லை என்ற தகவலுடன் பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்க்கை பெண் இல்லை என்றும் அது ஒரு வீடியோகேம் கதாபாத்திரம் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையில் செயற்கை பெண் கிடையாது

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ PlayStation  வீடியோ கேமில் உள்ள Detroit: Become Human என்ற வீடியோ கேமின் சோலி  கதாபாத்திரம் ஆகும் 

Detroit: Become Human என்ற வீடியோ கேமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த கதாபாத்திரம் பற்றிய செய்தியுடன் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவுன் அவர்களது யூடியூப் பக்கத்தில் கடந்த 2018 ம் ஆண்டு ஷேர் செய்யப்பட்டுள்ளது

இதனால், சோலி ஒரு செயற்கை மனிதர் அல்ல, வீடியோ கேம் கதாபாத்திரம் என்பது தெளிவாகிறது 

முடிவு:-

வீடியோ கேம் கதாபாத்திர வீடியோவை சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் என தலைப்பிட்டு ஒரு வீடியோவை ம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback