FACT CHECK பாகிஸ்தானில் பாஜக கொடி....... என பரவும் வீடியோ உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பிரேக்கிங் நியூஸ்: பாகிஸ்தானில் பாஜக கொடி....... பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் மோடி ஆட்சிக்கு வந்து சுதந்திரம் பெற்றுத் தருவார் என நம்பும் மக்களின் கொண்டாட்டம்....👏👏👍என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளத்தில் பரவிவரும் செய்தி:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் ஆண்கள் பெண்கள் என கும்பலாக பிஜேபி கொடி வைத்து ஆனந்தமாக உற்சாகமாக பாட்டு பாடி நடனமாடி வருகின்றார்கள் , அதனுடன் பிரேக்கிங் நியூஸ்: பாகிஸ்தானில் பாஜக கொடி....... பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் மோடி ஆட்சிக்கு வந்து சுதந்திரம் பெற்றுத் தருவார் என நம்பும் மக்களின் கொண்டாட்டம்....👏👏👍 என தகவலுடன் பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் நடக்கவில்லை மாறாக இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரில் நடந்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் நடக்கவில்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரில் கடந்த 31.03.2019 அன்று நடந்தது ஆகும்
இந்த வீடியோவை ஜம்மு காஷ்மீர் மாநில பிஜேபியின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிட்டுள்ளார்கள் அதில் ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் தொகுதியின் பாஜக வேட்பாளர் சோஃபி யூசுப் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் போது அவருடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்
முடிவு:-
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2019 ம் ஆண்டு நடந்த ஒரு வீடியோவை பொய்யாக தலைப்பில் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி